உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது தொடர்பாக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த தென்னரசு உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உதவி காவல் ஆய்வாளர் பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிவி ப்பு வெளியிட்டது. கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தி மார்ச் 16-ல் முடிவு வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வில் குறிப் பிட்ட மையங்களில் படித் தோர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். எழுத்துத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, மார்ச் மாதம் வெளியிடப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந் தது. அரசுத் தரப்பில், இந்த மனு 4 மாதம் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் வழக்கறிஞர், ஒரே பயிற்சி மையத்தில் படித்தோர் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை, என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அதுபோன்ற விதி மீறல் நடைபெற்றதா" என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப் பினர். அதற்கு அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசார ணையை ஜூலை 31-க்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago