கடலூர் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 150 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றள்ளது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீஅபிநவ் நடந்த 30.06.2019 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்த அவர் எடுத்த அதிரடி குற்ற தடுப்பு நடவடிக்கையால் கொலை, வழிப்பறி, திருட்டு, மணல் கடத்தல், லாட்டரி, போதைப் பொருள் விற்பனை, பாலியல் தொல்லை போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது வரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அமைக்கப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளான சிதம்பரம் பாபு, புவனகிரி மன்சூர்அலி, குண்டலபாடி முக்கூட்டு முருகன், அண்ணாமலைநகர் சுரேந்தர், நெய்வேலி நடராஜன், முனுசாமி உட்பட 62 பேர் மீதும், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சின்னகாப்பான்குளம் சிவராமன், காடுவெட்டி செல்வமணி, விருத்தாசலம் சுரேஷ், வடக்குத்து கோபி, திருச்சி வினோத்குமார் உட்பட 21 பேர் மீதும், கள்ளச்சாராயம், சாராய கடத்தல் வழக்கில் புதுச்சேரி குருவிநத்தம் கலைமணி, பத்திரக்கோட்டை வீரசேகரன் உட்பட 38 பேர் மீதும், லாட்டரி விற்பணையில் காட்டுமன்னார்கோவில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மீதும், மணல் கடத்தலில் மாளிகம்பட்டு குருசாமி, கண்டியங்குப்பம் சிவக்குமார் உட்பட 12 பேர் மீதும், பாலியல் வழக்கில் பெரியகாப்பான்குளம் சதீஷ் உட்பட 8 பேர் மீதும், போதைப் பொருள் விற்பனை செய்ததில் தாண்டவன்குப்பம் இளங்கோ, குறிஞ்சிப்பாடி உத்தரபதி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 1 ஆண்டு வெளியே வரமுடியத அளவுக்கு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 887 பேர் மீது 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த நடவடிக்கை மாவட்ட பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago