பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ.1,050 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By வி.சுந்தர்ராஜ்

தமிழகத்துக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீடாக ரூ.1,050 கோடியை காப்பீடு நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன் இன்று (ஜூலை 18) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், "பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்குக் காப்பீடு செலுத்தி வருகின்றனர். ஆனால், மகசூல் இழப்பு ஏற்படும்போது உரிய இழப்பீடை காப்பீடு நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. அப்படியே அறிவிக்கப்பட்ட இழப்பீடையும் உரிய காலத்தில் வழங்குவதில்லை. இதில் வெளிப்படைத் தன்மையைக் காப்பீடு நிறுவனங்களும், வேளாண்மைத் துறையும் கடைப்பிடிப்பதில்லை.

கடந்த மார்ச் 2020-ல் விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடைக்கு முன்பே பயிர்க் காப்பீடு நிறுவன அலுவலர்கள், வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, புள்ளியல் துறையினர் பயிர் அறுவடை சோதனையை மாவட்ட அளவில் முடித்தனர். ஆனால், இதுவரை அதன் அறிக்கையை வெளியிடவில்லை.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நெல், கரும்பு, பருத்தி மகசூல் இழப்பு ஏற்பட்டதால் ரூ.1,050 கோடியைக் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை மகசூல் இழப்புக்கு மட்டும் ரூ.5.16 கோடியை காப்பீடு நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்தத் தொகை எந்தெந்த விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை காப்பீடு செய்த விவசாயிகள், இழப்பீடு பெற்ற விவசாயிகள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடை வட்டியுடன் வழங்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்