பிரசாந்த்கிஷோர் தலைமையிலான கூட்டத்தை திமுக காசு கொடுத்து கூட்டி வந்துள்ளது. காசு கொடுத்து வேலை செய்ய கூட்டி வந்துள்ள திமுகவிற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப பிரிவு நியமன ஆலோசனை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினாா்.
விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றிய, நகர், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு வாரியான புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இதற்கு விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.
ஸ்ரீருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் வரவேற்புரையாற்றினார்
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க அதிமுக தகவல் தொழில்நுட்ப பி ரிவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விரைவாகவும் எளிதாகவும் கொண்டு செல்ல தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் ஆகிய சமூகவலை தளங்களைப் பயன்படுத்தி அ.தி.மு.க., சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் திறமை உள்ள நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசின் மீதான விமர்சனங்களை பொய்யான தகவல்களை திமுக முகநூல் வாட்ஸ் ஆப், டுவிட்டர் மூலம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். ஆகவே திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் நமது தகவல் தொழி்ல் நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயல்பாடுகள் துடிப்போடு இருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பங்களை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம், தற்போது சமூக இணையதளங்களில் வரும் தகவல்களே மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைகிறது. பிரசாந்த்கிஷோர் என்ற கூட்டத்தை திமுக காசு கொடுத்து கூட்டி வந்துள்ளது.
காசு கொடுத்து வேலை செய்ய கூட்டி வந்துள்ள திமுகவிற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 2021 தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க நமது தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி்கள் திறம்பட செயல்பட வேண்டும்.
அரசின் சாதனைகள், கட்சியின் நிகழ்ச்சிகள், அமைச்சர்கள், யூனியன் தலைவர்கள், கவுன்சிலர்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்களிடம் சேரும் வகையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயலாற்ற வேண்டும். படித்த இளைஞர்கள் கட்சி மீது பற்று கொண்ட துடிப்பு மிக்க இளைஞர்கள் தகவல் தொழில்நுடப பிரிவிற்கு புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்படுவார்கள்.
தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நகர பொறுப்பிற்கு 14 பேர், ஒன்றிய பொறுப்பிற்கு 14 பேர், ஊராட்சி கழக தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு ஒரு நபர், வார்டுக்கு ஒரு நபர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மேலும் இறந்து போன கிளை கழக செயலாளர்கள், வெளியூர் சென்று திரும்பாத கிளை கழக செயலாளர், செயல்படாமல் உடல்நலம் குன்றி இருக்கும் கிளை கழக செயலாளர்களை மாற்றி புதிய கிளை கழக செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago