கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டியில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தவிர, தனியார் கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் என்ற சிகிச்சை மையம் ஏற்படுத்தி அங்கும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி நகர பகுதியில் நேற்று முன்தினம் 35 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவில்பட்டி நகர பகுதியில் 26 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் பணியாற்றும் மருத்துவ பணியாளர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று இ.எஸ்.ஐ. மருந்தகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

இதே போல், தனியார் வங்கி ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து முன்னனெச்சரிக்கை நடவடிக்கையாக இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று வரை கரோனா பாதிப்புக்கு 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதே போல், கோவிட் கேர் சென்டரில் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல், கழுகுமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி காசாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்