கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக 100 முதல் 170 பேர் வரை தொற்று ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டாலும், அரசு மருத்துவமனை கரோனா வார்டுகள் நிரம்பி வருவதால் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகினறனர். நாகர்கோவில் நாகர பகுதியில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராம, நகர பகுதிகளில் கரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளார்.
» உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்ய வழக்கு
» மத்திய அரசு ஒப்புதல்: புதுவை சட்டப்பேரவையில் வரும் 20-ல் பட்ஜெட்
குமரியில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தோர் எண்ணிக்க 2163 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 64381 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி, கோட்டாறு, தென்தாமரைகுளம், நித்திரைவிளை காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் காவல் நிலையத்தில் பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மற்றும் அலுவலர்கள் கிருமி நாசினி அடித்து காவல் நிலையத்தை சுத்தப்படுத்தினர். மேலும் தக்கலை காவல் நிலையம் மூடப்பட்டது
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago