சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பும் நேரமிது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நிலவி வந்த மோதலை தொடர்ந்து கோபமடைந்த துணை முதல்வர் சச்சின் பைலட், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்தும், துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி இன்று (ஜூலை 17) ட்விட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:
"சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பும் நேரம் இது. சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆலோசனையின் பேரில் செயல்படுங்கள். நீங்களும் கட்சியின் ஒரு பகுதிதான். கட்சிக்கான தங்களின் பணியை அனைவரும் அங்கீகரிக்கின்றனர்"
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago