தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.4,12,500 உதவித் தொகை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று வழங்கினார்.
இதையடுத்து சிறுமியின் சடலத்தை பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்கு செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை கிராமத்தை சேர்ந்த சேகர்- உச்சிமாகாளி தம்பதியின் 8 வயது மகள் கடந்த 15-ம் தேதி இரு இளைஞர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (19), சுயம்பு மகன் நந்தீஸ்வரன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
» தனவேலு எம்எல்ஏ பதவி பறிப்பு விவகாரம்; கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாளர்கள் கடிதம்
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 201, போக்ஸோ சட்டம், வன்கொடுமை கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்காமல் சடலத்தை வாங்கமாட்டோம் எனக் கூறி உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வ.பரிமளா, திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார். வன்கொடுமை தடுப்பு சட்ட தீருதவியாக ரூ.8.25 லட்சம் வழங்கப்படும் எனக் கூறிய ஆட்சியர், அதில் முதல் தவணையாக ரூ.4,12,500-க்கான காசோலை, இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணை ஆகியவற்றை உடனடியாக சிறுமியின் தாய் உச்சிமாகாளியிடம் வழங்கினார்.
மேலும், சிறுமியின் தாய்க்கு மாதம் தோறும் ரூ.5000 ஓய்வூதிம், அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்கப்படும். தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும். பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் சடலத்தை பெற்று, ஊருக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.
பாலியல் பலாத்காரம் இல்லை:
இது குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் கூறும்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி வழக்கமாக முத்தீஸ்வரன் வீட்டுக்கு டிவி பார்க்க செல்வாராம். சம்பவத்தன்றும் அவ்வாறு டிவி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது முத்தீஸ்வரனுக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அந்த நேரத்தில் டிவி போடுமாறு சிறுமி நச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் சிறுமியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் மயங்கிய சிறுமியை டிரம்மில் போட்டு மூடி வைத்துள்ளார். 1 மணி நேரத்துக்கு மேலாக டிரம்முக்குள் இருந்ததால் மூச்சு திணறி சிறுமி இறந்துள்ளார். பின்னர் தனது நண்பர் நந்தீஸ்வரன் உதவியுடன் டிரம்மை மெபட்டில் வைத்து தூக்கிச் சென்று பாலத்துக்கு அடியில் போட்டுள்ளனர் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago