சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிற பாசிகள் மற்றும் 3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
» நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா: சுத்தமல்லி, முக்கூடல் காவல் நிலையங்கள் மூடல்
» எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: தூத்துக்குடி அருகே கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்
இதை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும். ஏற்கனவே ஜூன் 18, ஜூலை 7, 13 ஆகிய தேதிகளில் இதே பகுதியில் 3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை 35 செ.மீ. நீளமே உள்ளது. இதனால் 6 மாத குழந்தையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago