நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தோற்றுவித்த ஐஎன்ஏ படையில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி காந்திமதி பாய் மறைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல பண்ணைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதிபாய்(101). . இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐஎன்ஏ) பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடியவர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய ஒரே பெண்மணி காந்திமதி பாய் ஆவார். இவரது கணவர் ராமசாமி. இந்த தம்பதிகளுக்கு 14 குழந்தைகள், இதில் 11 பேர் உயிருடன் உள்ளனர். .
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கணவருடன் தனது சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார் காந்திமதிபாய்.
» உள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்: ஊரடங்கால் தவிப்பு
» தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக காந்திமதி பாய் புதன்கிழமை மறைந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் அவரது சொந்த கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago