சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றறப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஊரடங்கால் தவித்து வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு நவம்பரில் சொந்த ஒன்றியங்களில் பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்தநிலையில் மீண்டும் அவரவர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை. தற்போது கரோனா தொற்று பரவாமல் இருக்க பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதையடுத்து மாவட்டம் நிர்வாகம் சார்பில் காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவகங்கைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிவகங்கை தவிர்த்து மற்ற பகுதிகளில் பணிபுரிகின்றனர். பஸ் வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். இதையடுத்து நிர்வாகத்திற்கு எதிராக ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் செல்வக்குமார் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பஸ் வசதி மூலம் சிவகங்கையில் பணிபுரிவோர் பயன்பெறுகின்றனர். ஆனால் வேறு பகுதிகளில் பணிபுரிவோர் சிரமப்படுகின்றனர்.
பலர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் போராட்டத்தை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை,’ என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago