தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 16 கோடி கனஅடியாகக் குறைந்துள்ளதால், 2020- ல் கடல் நீர் பூமிக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 லட்சம் கிணறு கள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91 ஆயிரம் கிணறு கள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ் துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.
கடந்த 1998 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால மழை அளவை ஒப்பிடும்போது, எதிர்பாராதவிதமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்தும், தற்போது 40 சதவீதம் மழை மட்டும் பெய்துள்ளது. இதேநிலை நீடித்தால், 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய வறட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும் எனவும், அதற் குள் நிலத்தடி நீரை செறிவுபடுத் தாவிட்டால் விவசாயம் பொய்த்து விடும் நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது:
‘‘தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில், நிலத்தடி நீரின் அளவு 26.2 கோடி கனஅடியாக இருந்தது. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாகக் குறைந் துள்ளது. மக்கள் தொகை பெருக் கத்தால், நீரின் தேவை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேட்டுப் பகுதிகள் நிலத்தடி நீரை இழந்து வருகின்றன. ஆற்றின் கரையோரங்களில் ஒருசில பகுதி களில் மட்டும் நீர்வளம் உள்ளது.
மூடாமல் விடப்படும் குவாரி பள்ளங்கள் மற்றும் அந்த பகுதியின் நிலத்தடி நீர், பூமிக்குள் உட்புக முடியாமல் உள்ளன. அதனால், குவாரியை சுற்றியுள்ள பகுதிகள் நாளடைவில் நீர்வளத்தை இழக்கின் றன. குவாரிக்கான தேவை முடிந்த பின், அவற்றை தோண்டப்பட்ட மணலைக் கொண்டு மூடிவிட வேண்டும். பெரும்பாலான குவாரி கள், மூடப்படாமல் உள்ளன.
உலக சுகாதார நிறுவன கணக் கெடுப்பின்படி, தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை. ஆனால், 75 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 260 முதல் 300 லிட்டர் நீரை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பேருக்கு 40 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே கிடைக்கிறது.
ஊற்று என்பது 2 இன்ச் இடை வெளியில் 60 கி.மீ. நீளத்துக்கு பரவியிருக்கும் ஒரு அமைப்பு. ஒவ் வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் 6 முதல் 8 நீர் ஊற்றுகள் தரை யின் கீழ் உள்ளன. குடிநீர் மோட்டார் பயன்பாடு அதிகரிப்பால் ஊற்று தண்ணீர் அதிக அளவு உறிஞ்சப்படுகிறது. மக்களிடம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் நீர்ச்செறிவு ஏற்படுவதில்லை. அதனால், விவ சாயத்தில் பெரிய தேக்கத்தை காண முடிகிறது. குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலைகளில் மழைநீர் சேகரிப்பு
நீர் சேமிப்பு குறித்து பிரிட்டோ ராஜ் கூறும்போது,
‘‘5 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு இன்ச் அளவு மழை பெய்தால், அந்த கிராமத்துக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
இன்று சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. அதனால், தண்ணீர் பூமிக்குள் புகுந்து செறிவூட்ட வசதியின்றி, பள்ளங் களை நோக்கி ஓடி ஊருக்கு பலனில்லாத இடங்களில் சேகர மாகிறது. வெளிநாடுகளைப் போல் தார் சாலையின் இருபுறங்களிலும் வழிந்தோடும் நீரை சேகரிக் கும் அமைப்புகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண் டும்.
சாலையின் இரு புறங்களிலும் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில், சுமார் 5 முதல் 6 அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்து சிமெண்ட் பலகை, மூடிகள் கொண்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதில் 5 அடி வரை 60 மில்லி மீட்டர், 20 மில்லி மீட்டர் எடை கொண்ட ஜல்லிக் கற்களை நிரப்பி, மேல் பகுதியில் ஒரு அடி இடைவெளி விட்டால் அதன் வழியாக மழைநீர் விழுந்து சேகரிக்கப்படும். இவ்வாறு செய்தால் வறட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்றலாம்’’.
இவ்வாறு பிரிட்டோ ராஜ் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago