சுருக்குமடி வலை மீனவர்களுக்கு அரசின் மாற்றுத் திட்டங்கள்: நாகை ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்துவது குறித்து மீனவர்களுக்குள் மோதலும், மீனவ கிராமங்களில் பதற்றமும் எழுந்துள்ளது. இதையடுத்து மீனவ கிராமங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கேட்கும் மீனவர்கள், சுருக்குமடி வலைகளைக் கைவிட்டு அரசின் மாற்றுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்.பி.நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடவும், தமிழக கடற் பகுதியில் மீன் வளத்தினைப் பாதுகாத்திடும் பொருட்டும் மீன் வளத்தினை அழிக்கக்கூடிய சுருக்குமடி வலைகள் மற்றும் இரட்டைமடி வலைகள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படித் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றம் இரட்டைமடி வலைகளின் பயன்பாட்டினைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் அதனைக் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று வாழ்வதாரத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுருக்குமடி வலையைக் கைவிடும் மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்துடன் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் அரசால் வழங்கப்படும். 50 விழுக்காடு மானியத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசுத் திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்படும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலைப் படகுகளை 15 லட்சம் ரூபாய் மானியத்துடன் செவுள் வலைப் படகுகளாக மாற்றும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்கள் மீன்துறை உதவி இயக்குநர் நாகப்பட்டினம் மற்றும் சீர்காழி ஆகிய அலுவலகங்களை அணுகி இதற்கான விண்ணப்பத்தை அளித்துப் பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்