12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: கணினி அறிவியலில் 99.51% மாணவ, மாணவிகள் தேர்ச்சி; பாடவாரியான தேர்ச்சி விகித விவரங்கள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717. பள்ளி மாணவ,மாணவிகளாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931. இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415.

இந்நிலையில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்

அறிவியல் பாடப்பிரிவுகள் - 93.64%

வணிகவியல் பாடப்பிரிவுகள் - 92.96%

கலைப்பிரிவுகள் - 84.65%

தொழிற்பாடப்பிரிவுகள் - 79.88%

முக்கியப் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி விகிதம்

இயற்பியல் - 95.94%

வேதியியல் - 95.82%

உயிரியல் - 96.14%

கணிதம் - 96.31%

தாவரவியல் - 93.95%

விலங்கியல் - 92.97%

கணினி அறிவியல் - 99.51%

வணிகவியல் - 95.65%

கணக்குப் பதிவியல் - 94.80%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்