கொசவன்பாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மணல் திருட்டுக்கு இடையூறு செய்ததால் கொலை: கைதான 6 இளைஞர்கள் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள கொசவன்பாளையம், லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் பரமகுரு(37); சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். திமுகவைச் சேர்ந்த இவர், கொசவன்பாளையம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பலால் கொலைசெய்யப்பட்டார். இக்கொலை சம்பவம்தொடர்பாக, திருத்தணி பகுதியில் பதுங்கிஇருந்த ராஜேஷ், அப்பு என்கிற ரவிக்குமார், ஐயப்பன், கலாநிதி,சரவணன், முத்து ஆகிய 6 இளைஞர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கொசவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாமேடு பகுதியில் கூவம் ஆற்றில் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணல் அள்ள முயன்றுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரமகுரு,கூவம் ஆற்றில் மணல் அள்ளினால்ஆட்சியர், பொதுப்பணித் துறை அதிகாரிகள், போலீஸாரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், கோபமடைந்த ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரும், மணல் திருட்டுக்கு இடையூறாக இருந்த பரமகுருவை கொலை செய்துள்ளனர் என வாக்குமூலம் வாயிலாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் அறிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பரமகுருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பரமகுரு கொலைக்குநீதி கிடைக்கத் துணை நிற்பதுடன், அவரதுகுடும்பத்தினருக்கு திமுக என்றென்றும் ஆதரவாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்