கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கல்

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 71 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 வகுப்புகளில் 4816 மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பில் 5840 மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். இவர்களுக்கு இந்தாண்டுக்கான அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் 440 மாணவிகள் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை ரூத் ரத்னகுமாரி தலைமையில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.

வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவி தலைமை ஆசிரியர்கள் மந்திரமூர்த்தி, மாணிக்கராஜ் ஆகியோர் விலையில்லா புத்தகங்களை வழங்கினர்.

இதே போல், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் 369 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் காமராஜர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினியில் அனைத்து பாடங்களும் பதிவேற்றமும் செய்து தரப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்