கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியில் விடு பட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு, அம்ருத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் புதை சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த 2019, பிப்.28-ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின் 2-வது தொகுப்பில் மாநகராட்சியின் 20 வார்டுகள் பகுதி அளவும், 28, 29, 30, 61, 62 ஆகிய 5 வார்டு கள் முழுமையாகவும் பயன் பெறவுள்ளன.
இதில், 3-வது தொகுப்பில் கீழ கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள களம் புறம்போக்கில், நாளொன்றுக்கு 370 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.53.30 கோடியில் அமைக்க பணி உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இந்தப் பகுதி குடியிருப்புவாசிகளில் சிலர் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், கடந்த மார்ச் 16-ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதுவரை 10 சதவீதத்துக்கும் மேலாக பணிகள் முடிந்துள்ள நிலையில், பணியை உடனே நிறுத்திவிட்டு வேறு இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் அந்தப் பகுதி பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன் நேற்று சாலையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஆட்சியர் வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாசன வாய்க்காலை மறித்தும், விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதையை அடைத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சுகாதாரக் கேடு விளையும் அபாயம் உள்ளதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண் டும் என்றும் ஆட்சியரிடம் வலியு றுத்தினர்.
இதையடுத்து, “விவசாயத் தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. வயல்களுக்குச் செல்ல புதிய சாலை அமைத்துத் தருவதுடன், புதிதாக களத்துமேடு அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, வாய்க்காலை மறித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டால், அந்தப் பணி நிறுத்தப்படும்” என்று ஆட்சியர் சிவராசு உறுதி அளித்தார். இதை யடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago