கரோனா ஊரடங்கால் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு  திருவிழா ஊர்வலம் ரத்து 

By கி.தனபாலன்

புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது வலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இத்தர்ஹாவின் சந்தனக்கூடு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் கலந்து கொள்வர்.

846-ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா, ஜூலை 2-ம் தேதி முதல் மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு வருகிறது. முக்கியத் விழாவான சந்தனக்கூடு திருவிழா, ஜூலை 15-ல் நடைபெற உள்ளது.

கரோனா தடுப்பு ஊரடங்கை முன்னிட்டு திருவிழா நடத்த அரசு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தர்ஹாவில் மக்கள் கூட்டமாக கூடவும், சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

அதனால் ஜூலை 15 அதிகாலை தர்ஹாவில் உள்ள மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடக்க உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்