மதுரை மாவட்டத்தில் 6.067 பேருக்கு கரோனா பாதிப்பு: தினமும் 3,500 பேருக்குப் பரிசோதனை

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,067 ஆக உள்ளது. நாளொன்றுக்கு 3,500 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஜூலை 14-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை முதல் தளர்வுகள் அமலாகும்.

மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,067 ஆக உள்ளது. 116 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2,590 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2 நாட்களில் சுமார் 1,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் மூவாயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

100 காய்ச்சல் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டும் வரப்படுகிறது.

ஊரடங்கில் மதியம் 2 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளலாம். மதுரையில் நாளொன்றுக்கு 3,500 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கோவிட் சிகிச்சை மையங்களும் மதுரையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆறு கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 80% மதுரை மக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்