விவசாயிகள் உரம், கடன் பெற ஆன்லைன் நடைமுறைகள் எளிதாக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்

By செய்திப்பிரிவு

மத்திய வேளாண் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, மானிய விலையில் விற்கப்படும் உரம் மற்றும் இடுபொருட்கள் அனைத்துக்கும், டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, வேளாண் உர விற்பனைக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திருவாரூர் மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், நன்னிலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை நேற்று தொடங்கிவைத்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும். ஆன்லைன் என்பது காலத்தின் கட்டாயம். இருப்பினும் விவசாயிகள் உரம், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறுவது போன்ற செயல்பாடுகளில் ஆன்லைன் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்