கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் வில்சன் (57). இவர், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம் (30), தவ்பீக் (27), கடலூரைச் சேர்ந்த மொய்தீன் (53), ஜாபர் அலி (26), பெங்களூருவைச் சேர்ந்த மெகபூப் பாஷா (48), இஜாஸ் பாஷா (46) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முக மைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, சென்னையை அடுத்த பூந்த மல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், 6 பேர் மீதும் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago