சசிகலாவுக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலி தாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச் செய லாளராக பொறுப்பேற்ற சசிகலா, தமிழக முதல்வராகவும் முயற்சி செய்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் மீதான தண்டனை உறுதி செய்யப்படவே, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சிறைக்கு சென்றார். தற்போது தண்டனைக்காலம் முடிவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாதம் அவர் வெளியில் வரலாம் என தகவல்கள் வெளி யாகி யுள்ளன.
இந்நிலையில், நேற்று நாகையில் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், ‘சசிகலா சிறையில் இருந்து வந்தால் அவருக்கு அதிமுகவிலும், ஆட்சியிலும் இடம் அளிக்கப்படுமா’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த அமைச் சர், ‘‘ நான் சாதாரண மாவட்ட செயலாளர். முடிவெடுப்பது கட்சி தலைமைதான்’’ என்றார். இதையடுத்து, சென் னையில் கரோனா தடுப்பு பணியில் இருந்த அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கருத்து மற்றும் சசிகலாவுக்கான இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “அது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என்றுமே ஒரே முடிவுதான். அந்த குடும்பம், சசிகலா இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதுதான் அந்த முடிவு. அதே முடிவில்தான் தற்போதும் உள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago