லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

By செய்திப்பிரிவு

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக் கப்பட்டன. கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி(57), மணி கண்டன்(34), மதுரை மாவட்டம் தெத்தூர் மேட்டுப்பட்டி கணே சன்(35) ஆகியோரை அடுத்த சில தினங்களில் கைது செய்தனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருவாரூர் முருகன்(46) கடந்தாண்டு அக்.11-ம் தேதி பெங்களூரூ நீதிமன்றத்திலும், முருகனின் மைத்துனர் சுரேஷ்(28) கடந்தாண்டு அக்.10-ம் தேதி செங்கம் நீதி மன்றத்திலும் சரணடைந்தனர். அனைவரிடம் இருந்தும் சுமார் 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, முருகனை கைது செய்து 162 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கோட்டை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யா ததால் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக திருச்சி ஜே.எம்-1 நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை யடுத்து, விரிவான குற்றப் பத்திரிகை தயார் செய்யும் பணி மீண்டும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்போதைய இன்ஸ்பெக்டர் கோசலைராம் உட்பட 25 பேரை சாட்சிகளாகக் கொண்டு, முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை அண்மையில் ஜே.எம்-1 நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முருகன் உள்ளிட்டோருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரும் வகையில் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். அதற்கு நீதிமன்ற விசாரணை எண்ணும் வழங்கப்பட்டுவிட்டது. முருகன் உள்ளிட்டோருக்கு விரைவில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்