சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விவசாயிகள் எதிர்ப்பால் கண்மாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் ஊராட்சி புலவர்சேரி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய் மூலம் 300 பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அக்கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் தூர்வார ரூ.72 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள இருத்தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் தேர்தல் நடத்தி பெரும்பான்மை நிரூபிக்கும் விவசாயி சங்கத்திற்கு பணி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தாமலேயே ஒருத்தரப்பினர் இன்று பணி செய்ய ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்தனர்.
» உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாக்லேட் என விளம்பரம்; சாக்லேட் தொழிற்சாலைக்கு சீல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீஸார் கிராமமக்களை சமசரப்படுத்தி பணியை நிறுத்தினர்.
இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: பணி ஆணை பெறாமலேயே விதிமுறையை மீறி ஒருத்தரப்பினர் பணி செய்ய வந்தனர்.
இதனால் தடுத்து நிறுத்தினோம். மேலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள விவசாயிகள் சங்கத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய விடாமல் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
எங்கள் சங்கத்தை பதிவு செய்து, முறையாக தேர்தல் நடத்தி பெரும்பான்மை உள்ளோரிடம் பணியை ஒப்படைக்க வேண்டும்,’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago