மெட்ரோ சுரங்கப்பணி; சென்னை சென்ட்ரல் அருகே 15 நாட்களுக்குப் போக்குவரத்துக்கு தடை:  போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை சென் ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் 15 நாட்களுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தைத் தடை செய்வதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் விடுத்துள்ள அறிவிப்பு:

சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலமாக நடைபெற இருப்பதால் வருகின்ற ஜூலை 11 முதல் ஜூலை 25 வரை 15 நாட்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக EVR சாலை வருபவர்கள் தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.

2. முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் சென்ட்ரல் வழியாக செல்லாமல் முத்துசாமி சாலை வழியாக முத்துசாமி பாலம் - வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்..

3. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் ஈவினிங் பஜார் சாலை வழியாக இடது புறம் திரும்பி EVR சாலை சென்று வலது புறம் திரும்பி முத்துசாமி பாலம் - வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்.

4. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில்வே நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.

5. வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி EVR சாலை சென்று வலது பக்கம் திரும்பி முத்துசாமி பாலம் வழியாக வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.

6. இவர்கள் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது.

7. முத்துசாமி சாலையிலிருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.

இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்