பொதுமக்களிடம் போலீஸார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க எஸ்.பி ஜெயக்குமார் ஏற்பாடு செய்துள்ளார். மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறையினரை பகுதி பகுதியாக பிரித்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட தினமும் 50 பேருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதற்கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியை தொடங்கி வைத்து எஸ்பி ஜெயக்குமார் பேசியதாவது:
காவல் துறையினர் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும். சட்டத்திற்குட்பட்டே காவல் நிலைய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு கால தாமதமில்லாமல் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கில் எதிரிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.
காவல் துறையினர் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் பணியாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
தற்போது கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், அது பாதிக்காமல் இருப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
எஸ்.பி. இதில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago