சீனியாரிட்டி பட்டியல் குளறுபடியை சுட்டிக்காட்டிய ஊழியர்கள் இடமாற்றம்: ஊரக வளர்ச்சித்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஊழியர்கள் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியல் குளறுபடியை சுட்டிக்காட்டிய ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கரோனா சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு குளறுபடி உத்தரவுகளால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 1-ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு அளிப்பதற்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிட வேண்டும்.

ஆனால் 2 மாதங்கள் கழித்து ஊழியர்கள் போராட்டம் அறிவித்தபின்பே அவசர, அவசரமாக சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலிலும் சீனியார், ஜூனியராகவும், ஜூனியர் சீனியராகவும் குளறுபடியாக வெளியிடப்பட்டது. ஊழியர்கள் பிரச்சினை செய்ததும் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.

அதேபோல் உதவியாளராக பதவி உயர்வு அளிப்பதற்கான சீனியாரிட்டி பட்டியலில் உயிருடன் இருக்கும் ஊழியர் இறந்துவிட்டதாக இருந்தது. அதன்பின்பு அந்த பட்டியலும் திருத்தப்பட்டது.

தொடர்ந்து ஊழியர்கள் பணிமாறுதல் செய்வதற்கான செயல்முறை ஆணையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என இருந்தது. இதுபோன்ற குளறுபடிகளை சுட்டிக்காட்டிய ஊழியர்கள் இருவரை இடமாற்றம் செய்துள்ளனர்.

மேலும் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி உயர்வு வழங்காததால் பல்வேறு நிலைகளில் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் ஜூலை 15-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி கூறுகையில், ‘‘காளையார்கோவில் ஒன்றியத்தில் இருந்து வந்த பட்டியல் அடிப்படையில் தான் உதவியாளராக பதவி உயர்வு அளிப்பதற்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்கள் இறந்தவர் என தவறுதலாக கொடுத்துவிட்டனர்,’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்