சரக்கு வாகனங்களுக்கு காலாண்டு வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் தொழிற்சாலைகள், அரசு மணல் குவாரிகள், அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தவிர, சரக்கு வாகனங்கள் முழுவதும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் மக்களின் தேவைகளுக்கான மளிகை, காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து எடுத்து வர அரசின் வேண்டுகோளை ஏற்று 10 சதவீத லாரிகள் இயக்கப்பட்டது. எனினும், அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் பிற லாரிகளை இயக்க முடியவில்லை.
இதனால் ஓட்டுநர்கள் பாதிப்பிற்குள்ளானது மட்டுமின்றி லாரி உரிமையாளர்களும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சரக்கு வாகனங்களுக்கு காலாண்டு வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago