கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் செந்தில்குமார் (43). இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து இன்று (ஜூலை 9) அதிகாலை காரில் உறவினர்கள் ரவி (60), கருப்புசாமி (52) ஆகியோருடன் சின்னதாராபுரம் நோக்கி வந்துள்ளார். வைரமடை அருகே வரும்போது திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற காருடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் ரவி, கருப்புசாமி, செந்தில்குமார், திருப்பூர் சென்ற கார் ஓட்டுநர் சந்தோஷ்குமார், அதில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த சித்ரா (35), அவரது 12 மற்றும் 9 வயதுடைய மகன்கள் என 7 பேரும் காயமடைந்தனர். சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி, கருப்புசாமி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த 9 வயது சிறுவன், காயமடைந்த செந்தில்குமார், லேசான காயமடைந்த சந்தோஷ்குமார், சித்ரா, 12 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தென்னிலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago