விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மணல் கடத்தல் கும்பலே காரணம் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. மேலும் விஏஓவுக்கு ஆதரவாக கிராமமக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என ஜெயம்கொண்டான் மற்றும் புக்குடி குரூப் விஏஓ கிருஷ்ணகுமார், களத்தூர் விஏஓ அருள்ராஜ், நாட்டுச்சேரி விஏஓ இளங்கோவன் ஆகியோரை தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் விஏஓ அருள்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மணல் கடத்தல் கும்பலே காரணம் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த இயக்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: விஏஓ அருள்ராஜ் ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்பினார்.
» முதல்வர் இதயத்தில் ஈரம் இருந்தால் மின் கட்டணப் பிரச்சினையைச் சரி செய்யுங்கள்: ஸ்டாலின் விமர்சனம்
இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு மணல் கடத்தல் கும்பல் காரணம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் போஸ், சீனிவாசன், செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: ஜூலை 1-ம் தேதி காரைக்குடி வட்டத்தில் வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் அன்றே எங்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்தபின்பே, ஜமாபந்தி நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும் ஜமாபந்தி தொடர்ந்து நடந்தது. கரோனா அச்சம் காரணமாக சஸ்பெண்ட் ஆன மூன்று விஏஓக்களும் கிராம கணக்குகளை வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில் அவர்ககளை சஸ்பெண்ட் செய்தது கண்டனத்திற்குரியது. சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஒருசிலருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக விஏஓ அருள்ராஜ் சஸ்பெண்ட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago