சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஏற்கெனவே ஜூன் 18-ம் தேதி இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடை ( 75 செ.மீ.,) விடச் சிறியது.
இந்த எலும்புக்கூட்டை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும். இதன்மூலம் இப்பகுதி ஈமக்காடாக இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago