பிறந்து 8 நாளே ஆன குழந்தை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சையை மதுரை வேலம் மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வெற்றிகர மாகச் செய்து சாதனை படைத் துள்ளனர்.
மதுரை அனுப்பானடி அருகே தூத்துக்குடி செல் லும் சுற்றுச்சாலையில், வேலம் மாள் மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. 136 ஏக்கரில் 28 லட்சம் சதுர அடியில் கட்டப் பட்டுள்ள இம்மருத்துவமனை சேவையில் 250 மருத்துவர்கள் உட்பட 1,400 ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். 2011ல் தொடங்கப் பட்ட இம்மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சேவையை ஆண்டுக்கு 4 லட்சம் பேர் வரையிலும் பெறுகின்றனர். 20 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 10 நாட்களில் 2 அரிதான அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனை இதய நோய் பிரிவு மருத்துவக் குழு வினர் வெற்றிகரமாக மேற் கொண்டுள்ளனர்.
பிறந்து 8 நாளே ஆன குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோ தித்தபோது இதயத்தில் கோளாறு இருந்தது தெரிந் தது. அறுவை சிகிச்சை மேற் கொண்டால்தான் குழந்தை யைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. மருத்துவர் எல். மோகன கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு சிக்க லான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து குழந் தையைக் காப்பாற்றினர்.
இதேபோல, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள் மிக்கோ (2), மைக்கேல் (6) ஆகி யோர் இதய நோய் சிகிச்சைக் காக ரோட்டரி சங்கத்தின் உதவி யுடன் சேர்ந்தனர். இவர்களை மருத்துவர்கள் பரிசோதித் ததில் மிக்கோவுக்கு இதயத் தில் துளை உட்பட 4 வித மான நோய்கள் இருந்தது தெரியவந்தது. மைக்கேலுக்கு இதயத்தில் சுத்தமான ரத்தத் துடன் அசுத்த ரத்தமும் கலப் பது தெரிந்தது. இதனால் நடப்பதற்கு சிரமமாகவும், சளி பிடித்தால்கூட தாங்க முடியாத நிலையும், கால், கை உள்ளிட்ட பல உறுப்புகள் நீல நிறத்துக்கு மாறும் அறிகுறியும் அடிக்கடி தென்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அதிக பட்சம் 10 ஆண்டுகள்கூட அவர் கள் வாழ்வதே சிரமம் என்பது தெரிந்தது.
சிறுவர்கள் 2 பேருக்கும் அரிதான அறுவை சிகிச் சையை இதய நோய்ப் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் மோகனகிருஷ்ணன், மாதவன், செல்வக்குமார், சண்முகசுந்தரம் தலைமையி லான 15 பேர் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண் டனர். மைக்கேலுக்கு வால்வு மாற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து நேற்றுடன் 8 நாட்கள் நிறைவடைந்த நிலை யில், சிறுவர்கள் 2 பேரும் உற்சாகமாக சொந்த ஊர் புறப்பட தயாராக உள்ளனர்.
மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்து வர் எஸ்.அசோகன் கூறியது: மருத்துவக் கல்லூரியுடன், 10 இணை மருத்துவப் பாடத் திட்டத்துடன் தனிக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. செவி லியர் கல்லூரி அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டு தொடங்கும். இப்பகுதி மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை குறைந்த செலவில் அளிக்கும் நோக்கத் துடன் சேவையை தொடர் கிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago