ஜூலை 1-ம் தெதி முதல் 3-ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் பணம் கொடுத்துப் பொருள் வாங்கியோருக்கு அடுத்த மாத விலையில் ஈடுசெய்யப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் காமராஜ் இன்று (ஜூலை 6) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் 31-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே இவ்வாண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதைப் போலவே, இம்மாதமும் (ஜூலை) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது ஜூலை 1 முதல் ஜூலை 3 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்துப் பெற்றுள்ளனர்.
அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்தத் தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும்.
இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாய விலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல், நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதைக் கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கெனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார்".
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago