நள்ளிரவில் போலீஸ் வாகனத்தில் வந்து மிரட்டல் ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்ட கும்பல்: ராமநாதபுரம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

போலீஸ் என எழுதப்பட்ட வாகனத்தில் நள்ளிரவில் வந்த கும்பல் ஆசிரியரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது குறித்து ராமநாதபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் இணைந்து ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் ஏஜெண்டாக செயல்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டி தராமலும், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவரின் புகாரின்பேரில் நீதிமணி, ஆனந்த் ஆகிய இருவரையும் பஜார் போலீஸார் ஜூன் 10-ம் தேதி கைது செய்தனர்.

இது குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர் களின் முதலீடு குறித்து விசார ணை செய்தனர்.

ஆனால் போலீஸார் அவர் களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. உச்சிப்புளி வட்டாரத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் ஆரோக்கிய ராஜ்குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் தனக்குத் தெரிந்தவர்களை முதலீடு செய்ய வைத்துள்ளார். இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி நள்ளிரவில் ஆரோக்கிய ராஜ்குமார் வீட்டுக்கு காவல் என எழுதப்பட்ட காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை அழைத்துச் சென்றது.

கழுகூரணி உள்ளிட்ட பகுதி களில் சுற்றி வந்த அக்கும்பல், ஆரோக்கிய ராஜ்குமாரை துன்புறுத்தியதுடன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. அக்கும்பல் தங்களைப் போலீஸ் எனக் கூறியதுடன், ஜூலை 2-ம் தேதி அதிகாலை ராமேசுவரம் சாலை போக்குவரத்து நகர் பகுதியில் இறக்கிவிட்டனர்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறை தீர்க்கும் செல்போன் எண்ணில் தகவல் தெரிவித்துவிட்டு, கேணிக் கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார் தெரி வித்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை மற்றும் கேணிக்கரை போலீஸார் தனிப்படை அமைத்து விசாரிக் கின்றனர்.

கேணிக்கரை போலீஸார் அடையாளம் தெரியாத சில நபர்கள் ஆசிரியரைக் கடத்தியதாக நேற்று வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்