உ.பி.யில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபேவை தீவிரமாக தேடும் 25 தனிப்படைகள்: ரவுடியின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர் உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய ரவுடி விகாஸ் துபேவை 25 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன. இதனிடையே துபேவின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை பிடிக்க பிக்ரு கிராமத்துக்கு 2-ம் தேதி போலீஸார் சென்றனர். அப்போது ரவுடி கும்பல் போலீஸாரை நோக்கி துப்பாக்கி யால் சுட்டது. இதில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர் உட்பட 8 போலீஸார் இறந்தனர். இதை யடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லப் பட்டனர். இந்த களேபரத்தில் அரு கில் இருந்த சம்பல் காட்டுக்குள் புகுந்து விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி யோடினர்.

அவர்களைப் பிடிக்க காவல் துறை சார்பில் 25 படைகள் அமைக் கப்பட்டுள்ளன. அதிரடிப்படை யினரும் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் இறங்கி யுள்ளனர். அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் விகாஸ் துபே குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

இதில் விகாஸுக்கு உளவு பார்த்து வந்ததாக பிக்ரு கிராமப் பகுதியின் காவல் நிலையமான சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

இவர் அவ்வப்போது விகாஸை வீட்டில் சந்தித்து பேசிய தாகக் கூறப்படுகிறது. விகாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளின் சுமார் 500 கைப்பேசிகளின் பதிவுகள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

சம்பவத்துக்கு பின் அருகி லுள்ள சம்பல் காடுகளில் புகுந்து தப்பிய விகாஸ் துபே, ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மறைந்திருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது.

இதனிடையே பிக்ருவின் கோட்டையாகக் கருதப்படும் விகாஸின் வீடு சட்டவிரோதமாக அனுமதி யின்றி கட்டப்பட்டிருப்பது தெரிந் தது. இதனால், நேற்று அந்த வீடு கான்பூர் வளர்ச்சி ஆணையம் சார் பில் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. அங்கிருந்த விகாஸின் சொகுசு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இப்பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் புரியும் ரவுடிகள் விகாஸ் துபேவின் வீட்டில் அடைக்கலம் பெறுவது வழக்கமாக இருந்துள்ளது.

போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து தப்ப பிக்ரு கிராமத் தில் விகாஸ் அமைத்த சிசிடிவி கேமராக்களும் சேதப்படுத்தப் பட்டன. விகாஸின் ஆதரவில் தேர்தலில் வெல்ல முடியும் எனக் கருதும் வேட்பாளர்கள் தங் களது பிரச்சாரங்களை அவரது வீட்டில் இருந்து தொடங்குவதை யும் வழக்கமாகக் கொண்டிருந் துள்ளனர். இந்த அளவுக்கு உத்தர பிரதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார்.

முன்னதாக வீட்டில் இருந்த விகாஸின் தந்தை ராம் குமார் துபேவும் அவரது 2 பணியாளர்களும் போலீஸ் காவ லில் வளைக்கப்பட்டனர். அவர் களிடம் இருந்த விகாஸின் வங்கிக் கணக்கு புத்தகங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மகனை சுட்டுக் கொல்லுங்கள்

லக்னோவில் உள்ள விகாஸின் உறவினர்கள் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது விகாஸின் சகோதரர் வீட்டில் அவரது தாயார் சரியா தேவி இருப்பது தெரியவந்தது. சரியா தேவி கூறும்போது, "உத்தர பிரதேசத்தில் ராஜ்நாத்சிங் முதல்வராக இருந்தபோது மாநில அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்துக்குள் புகுந்து விகாஸ் துபே சுட்டுக் கொன் றான். சட்டப்பேரவை உறுப்பின ராக வேண்டும் என எண்ணி குற்றச்செயல்களில் இறங்கிய விகாஸ், போலீஸாரிடம் சரண டைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சரணடையவில்லை எனில் போலீஸார் எனது மகனை சுட்டுக் கொல்ல வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்