திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 921 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதில் 619 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். 294 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 8 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் 34 பேர், அம்பாசமுத்திரத்தில் 6 பேர், சேரன்மகாதேவி, நாங்குநேரியில் தலா ஒருவர், பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் 4 பேர் என்று மொத்தம் 46 பேருக்கு இன்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 967 ஆகியுள்ளது. ஓரிரு நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது மக்களது அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago