அரியலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது; தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு

By பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் முத்துவஞ்சேரி அருகே பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் தா.பலூரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (54). இவர், தூத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் தூத்தூரில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (30) மற்றும் அவரது தாயார் மீது உதவி ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது நண்பர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (31), ராம்கி (29) ஆகியோருடன் எஸ்.ஐ. மணிவண்ணனைத் தாக்க முடிவு செய்தார்.

இதனையடுத்து நேற்று (ஜூலை 3) மாலை உதவி ஆய்வாளர் மணிவண்ணன் தனது பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​மேற்கண்ட மூன்று பேரும் முட்டுவாஞ்சேரி அருகே மணிவண்ணனை தடுத்து, கற்களைப் பயன்படுத்தித் தாக்கிவிட்டுத் தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், மணிவண்ணனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, உதவி ஆய்வாளரை தாக்கிய சதீஷை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்