பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதமா? ஸ்கைப் மூலம் தீர்வு; திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

By அ.வேலுச்சாமி

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களுக்கு தாமதம் ஏற்படுவது தொடர்புடைய குறைகளை ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துத் தீர்வு காணலாம் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மரக்கடையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் அவசரத் தேவைக்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களுக்குத் தாமதம் ஏற்படுவது போன்ற குறைகளை ஸ்கைப் மூலம் கேட்டறிந்து தீர்வு கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்கைப் மூலம் பங்கேற்க விரும்புவோர் 'PASSPORT OFFICE TRICHY' என்ற ஸ்கைப் ஐ.டி. மூலம் வரும் 7-ம் தேதி முதல் தொடர்பு கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி குறைதீர் அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்து, பல்வேறு காரணங்களால் பாஸ்போர்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுவோர் மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான விசாரணைகளை 0431-2707203, 2707404 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 7598507203 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது rpo.trichy@mea.gov.in என்ற இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-258-1800 என்ற டோல்ப்ரீ எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்