மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த, தொற்று இல்லாத நபர்களைத் தனிமைப்படுத்த 50 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், வியாசர்பாடி, விருகம்பாக்கம், நெற்குன்றம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் வைரஸ்தொற்று அதிகமாக உள்ளது.
மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கு தொற்று இல்லாத நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்த 50 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது இந்த மையங்களில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago