சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தகணவர், தனியார் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் இறப்புக்கு நியாயம் வேண்டும் என பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெண் ஒருவர் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பேசும் பெண், ‘நான் கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர். எனது கணவர் கடந்த 25ம் தேதி சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அன்று முதல் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
அன்று இரவு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில், கரோனா சோதனை எடுத்து சுந்தரவேலு என்பவர் இங்கு உள்ளார் என அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் நட்சத்திர ஓட்டலில் மர்ம
மான முறையில் இறந்துள்ளார்.
கரோனா சோதனை செய்து தனிமைப் படுத்தியவருக்கு அரசுதான் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும், அந்த ஓட்டல்தான் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். கரோனா சோதனை செய்கிறேன் என கூறி கணவரை கொன்று விட்டனர். எனது கணவர் இறப்புக்கு நியாயம் வேண்டும் என்று கதறிஅழுகிறார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டபோது, ‘கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரவேலு என்பவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு
உயிரிழந்துள்ளார். தற்போது, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவி
சந்திரா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. சுந்தரவேலுக்கு கரோனா தொற்று இல்லை என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago