காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு நேற்று 2 ஆயிரத்தை கடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,981 ஆக இருந்தது. இச்சூழ்நிலையில் நேற்று மேலும் 86 பேருக்கு தொற்று ஏற்பட்டது தெரிந்தது. இதனால் இங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,067 ஆக உயர்ந்தது. இவர்களில் 844 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே பாதிப்பு எண்ணிக்கை 5,422 ஆக இருந்தது. நேற்று திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வந்த 2 பேர் உட்பட மேலும் 226 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,648 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3,831 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 147 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,978 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு 1,553 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்