சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் விழாவில் பங்கேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் அவ்விழாவில் பங்கேற்ற அதிகாரிகள், பயனாளிகள் கலக்கமடைந்தனர்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் 61 பேருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையமும் 120 பேருக்கு பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் விழாவில் பங்கேற்ற வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அமைச்சர் விழாவில் பங்கேற்ற அதிகாரிகள், பயனாளிகள், அரசியல் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மேலும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வருகிறது. அதிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் பங்கேற்றார்.
ஏற்கெனவே இளையான்குடி துணை வட்டாட்சியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதால் ஜமாபந்தியை நிறுத்த வேண்டுமென, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வலியுறத்தி வருகின்றனர்.
ஆனால் தொடர்ந்து ஜமாபந்தி நடந்து வரும்நிலையில் படிப்படியாக வருவாய்த்துறை ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago