கடந்த 4 மாதங்களாகவே மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது மக்களை குழப்பத்துக்கும், அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் அளவுக்கு மின் கட்டணப் பிரச்சினை பூதாகரமாகியுள்ள நிலையில், மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கீடு செய்து, அதற்குரிய தொகையை வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக கோவை 'சிட்டிசன்ஸ் வாய்ஸ்' நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறயதாவது:
"கடந்த 4 மாதங்களாக மின் கட்டணத்தைக் கணக்கிட்டு, தொகையை வசூல் செய்வதில் பல்வேறு குழப்பங்களும், பொதுமக்களிடம் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பிலும் பயனீட்டாளர்கள் போதுமான விளக்கங்களைப் பெற இயலவில்லை. வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் கட்டணம் செலுத்துகிறோமோ என்ற அச்சமும், மின் வாரியம் பயனீட்டாளர்களை ஏமாற்றுகிறது என்ற உணர்வும் பொதுமக்களிடம் பரவலாக உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தமிழக அரசு உரிய தீர்வைத் தர வேண்டும்.
இது தொடர்பாக ஒரு 'ஹெல்ப் லைன்' எண் அல்லது வாட்ஸ் அப் எண்ணை அறிவித்து, மின் நுகர்வோரின் தனிப்பட்ட மின் பயனீட்டுக் கணக்கில் சந்தேகங்களும், குறைகள் இருப்பின், அந்த எண்களில் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தலாம். தனித் தனியாக விளக்கம் அளிக்கும்போது பயனீட்டாளர்கள் பெரிதும் திருப்தியடைவர்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் முறையை மாற்றி, ஒரு மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம். அல்லது இரண்டு மாதங்களுக்குப் பயன்படுத்தப்படும் மின் யூனிட்டுகளை இரண்டாகப் பிரித்து, மாதாந்திர கட்டணத்தை வசூலிக்கலாம். மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் மின்னணுக் கருவிகள் போதிய அளவில் உள்ளதால், மாதாந்திர கணக்கெடுக்கும் பணியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். நுகர்வோர் நலன் கருதி இந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்"
இவ்வாறு சி.எம்.ஜெயராமன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago