செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாலையில் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அதிகாலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு 256 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலும், 35 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும், 30 பேர் சாதாரண வார்டிலும் என 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன் தினம் அதிகாலை 1.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு , கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நோயாளிகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் இரவு நேரத்திலும் சிறப்பாக பணியாற்றும் மருத்துவ குழுவினரை வெகுவாக பாராட்டினர். இந்த ஆய்வின் போது மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE