தவறு செய்தவர்களை கைது செய்யக: சாத்தான்குள வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்த பின கே.எஸ்.அழகிரி பேட்டி- கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்

By ரெ.ஜாய்சன்

சாத்தான்குளம் வியாபாரிகள் விவகாரத்தில் தவறு செய்த காவலர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 22-ம் தேதி கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்தனர். காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச் வசந்தகுமார், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி கிடைக்கும்வரை இறந்தவரின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி அவரது குடும்பத்தினரும் போராட்டம் நடத்தினர்

அதன் பின்பு இரண்டு நாட்கள் கழித்து மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. இதனையடுத்து இருவரின் உடலையும் அவரது குடும்பத்தினர் பெற்று நல்லடக்கம் செய்தனர் .

இந்த நிலையில் சாத்தான்குளம் வணிகர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்தது. அதேபோல் திமுகவும் நிதி உதவி அளித்தது. திமுக எம்.பி.கனிமொழி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கோவில்பட்டி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்தக் குடும்பத்திற்கு துணையாக நிற்போம் என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார்

அதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி இன்று (ஜூன் 29) காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட் நிதியினை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் நாங்கள் வியாபாரிகள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

அரசு மற்றும் காவல்துறை தரப்பில் வியாபாரிகள் உயிரிழப்பு குறித்து எந்தத் தகவலும் தரவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குற்றசெயல்புரிந்த காவலர்களுக்கு அரசும் காவல்துறையும் துணைபோகக்கூடாது. தமிழக காவல்துறை கண்ணியமிக்கது. அதில் உள்ள சில கருப்பு ஆடுகளை பாதுகாக்க நினைத்தால் காவல்துறை மேல் சந்தேகக் கண் எழும்.

தவறு செய்த காவல்துறையினரை கைது செய்யுங்கள். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே சிபிஐ விசாரணை கேட்டோம்.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபி.ஐ விசாரணை செய்வோம் என முதல்வர் சொல்வது காலதாமதத்தை ஏற்படுத்த முதல்வர் செய்யும் தந்திரம்.

சிபி.ஐக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். அரசும் காவல்துறையும் உடனடியாக செயல்படவில்லை என்றால் அது மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்து இந்த அரசு வீழ்வதற்கு காரணமாகும்.

யார் தவறு செய்தாலும் அவரைர்க் தண்டிப்பது தான் காவல்துறைக்கு அழகு.

உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் ₹10 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.

பேய்க்குளத்தில் ஒரு நபரும் இதே காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளால் தாக்கபட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல தென்மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் தாக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வருகிறது இது குறித்தும் அரசு விசாரணை செய்யவேண்டும்" என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்