காவல்  ஆய்வாளருக்கு  கரோனா-  மூடப்பட்ட பரமக்குடி காவல்  நிலையம்: இரு முதியவர்கள் கரோனாவால் உயிரிழப்பு

By கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும் 2 முதியவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 648 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 176 பேர் குணமடைந்துள்ளனர், மீதி 468 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், மருத்துவத்துறையினர், ஊடகத்தினர் என பலதரப்பைச் சேர்ந்தோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 54 வயதுடைய பரமக்குடி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்க தொற்று உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காவல் நிலையம் மூடப்பட்டது.

இரண்டு பேர் மரணம்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 முதியவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்நிலையில் ராமநாபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கீழக்கரையைச் சேர்ந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். இவரது பரிசோதனை முடிவு வராமல் இருந்தது. அதனையடுத்து அவர் நேற்று கரோனா தொற்றால் உயிரிழந்தார். என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கமுதி அருகே கொத்தபூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 75 வயது முதியவரும் உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த மூதாட்டி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பில் நேற்று முன்தினம் வரை 4 பேர் மட்டும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்