பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தன்னிடம் ரூ.48.31 லட்சம் மட்டுமே மதிப்பிழப்பு செய்த நோட்டுகள் வைத்திருந்ததாக வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை சசிகலாவிடம் ரூ.1,911 கோடி பணமதிப்பிழப்பு கரன்சி இருந்ததாகத் தெரிவித்ததையடுத்து அதனை மறுத்து தன்னிடம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளில் தன்னிடம் ரூ.48.31 லட்சம் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் தான் வைத்திருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை தன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் டிசம்பர் 30, 2016 அன்றே செலுத்தி விட்டதாக அவர் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை (விசாரணைப் பிரிவு) இணை இயக்குநர், பினாமி தடை வருமானவரிப்பிரிவு உதவி இயக்குநருக்கு மே 14, 2019-ல் எழுதிய கடிதத்தை தனக்கு ஆதாரமாக சசிகலா நம்புவது தெரிய வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட ரூ.1911 கோடி ‘3வது நபருக்கு’ சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பினாமி சொத்து பரிவர்த்தனைத் தடைச் சட்டம், 1988-ன் கீழ் நடவடிக்கைகள் எடுப்பதற்காக இணை இயக்குநர் எழுதிய அந்தக் கடிதத்தில் தங்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின்படி சந்தேகத்துக்கு இடமான வகையில் 1674 கோடி சொத்துக்கள் வாங்குவதற்காக வைத்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
பட்டியல் விவரங்களை அளித்த அவர் மேலும் தெரிவித்தபோது, “மேற்கண்ட தரவுகளின் படி இந்த ரொக்கம் மூன்றாவது நபருக்குச் சொந்தமானது, சசிகலா இதனை அந்த 3வது நபரின் உடனடி அல்லது எதிர்காலப் பயன்களுக்காக தன் கைவசம் வைத்திருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, சசிகலாவின் ஆடிட்டர்கள் ஜனவரி 3ம் தேதி அவருக்கு அளித்த பதிலில், “குறிப்பிட்ட அந்தக் கடிதத்தின் இந்த குறிப்பிட்ட பகுதி பணம் இவருக்குச் சொந்தமானதல்ல, 3ம் நபருடையது என்பது தெளிவாகிறது” என்று கூறியிருந்தனர்.
மேலும் செப்டம்பர் 3ம் வாரம் முதல் டிசம்பர் 5, 2016, ஜெயலலிதா மரணம் வரை சசிகலா மருத்துவமனை தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருந்தார் என்று ஆடிட்டர்கள் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது சசிகலா முழுதும் கட்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார், பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை என்றும் ஆடிட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உதவி ஆணையர் இந்த விளக்கங்களை ஏற்கவில்லை. ரொக்கம் யாருக்குச் சொந்தம் என்பது கவலையில்லை, குறிப்பிட்ட பினாமி பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாக அதிக ஆதாரங்கள் இருப்பதாக ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago