கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னை, மற்றும் வெளிநாட்டில் இருந்து வருவோரால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கடற்கரை பகுதிகள், மற்றும் கிராமப்புறங்களில் கரோனா வேகமாக பரவி வருகிறது. மீனவ கிராமமான தூத்தூரில் மட்டும் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 60 பேராக உயர்ந்துள்ளது.
மேலும் குவைத்தில் இருந்து வந்த கர்ப்பிணி பெண், மற்றும் 3 வயது குழந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆசாரிபள்ளம் அரசு முரத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
» கரோனாவால் சிவகங்கையில் இருவர் மரணம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
» சிவகங்கையில் மேலும் 100 படுக்கைகளுடன் கரோனா வார்டு: கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி தகவல்
தக்கலை, படந்தாலுமூடு, குருந்தன்கோடு, இளங்கடை, சுசீந்திரம், குலசேகரம் தூத்தூர், வள்ளவிளை உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400 பேரை தாண்டியுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் கரோனா தொயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்பாடாக 2 ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய முன்ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago