மதுரை, தேனி மாவட்டத்துக்கும் மின் கட்டணம் கட்ட அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மின் கட்டணம் கட்ட இம்மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மதுரை, தேனி மாவட்டத்திற்கும் முழு ஊரடங்கு காரணமாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாழ்வழுத்த மின்நுகர்வோரின் கவனத்திற்கு!

1. கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு ஊரடங்கினை 30.06.2020 வரை சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

2. இதனைத் தொடர்ந்து முதல்வரால் 15.06.2020 அன்று செய்திக்குறிப்பு எண் 90 வாயிலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 19.06.2020 முதல் 30.06.2020 வரை சில அத்தியாவசிய பணிகள் நீங்கலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3. மேலும் G.O.(Ms).No.314, Revenue and Disaster Management (DM-II) Department dated 22.06.2020 வாயிலாக பேரிடர் மேலாண்மை வகை சட்டம் 2005-ன்படி 24.06.2020 அதிகாலை 12 மணி முதல் 30.06.2020 நள்ளிரவு 12 மணி வரை மதுரை மாநகராட்சி, பரவை நகர் பஞ்சாயத்து மதுரை கிழக்கிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்து மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மதுரை மாவட்டப் பகுதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் சில அத்தியாவசியப் பணிகள் நீங்கலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4. செய்திக் குறிப்பு எண்.44, நாள் 23.06.2020, வாயிலாக தேனி மாவட்ட ஆட்சியரால் தேனி நகராட்சி, கம்பம் நகராட்சி, சின்னமனூர் நகராட்சி, போடிநாயக்கனூர் நகராட்சி மற்றும் கூடலூர் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு 24.06.2020 மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5. ஏற்கெனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மின்நுகர்வோர்களுக்கு, மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 25.03.2020 முதல் 14.07.2020 வரை இருப்பின், அதனை 15.07.2020 வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

6. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்த தமிழகத்தில் பிற மாவட்டங்களிலுள்ள மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 25.03.2020 முதல் 14.06.2020 வரை இருப்பின், அதனை 15.06.2020 வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்நுகர்வோர்களுக்கு 15.06.2020 வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படவில்லை.

7. தற்பொழுது மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் ((LT consumer) அவர்களது மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி 24.06.2020 முதல் 14.07.2020 வரை இருப்பின் அந்நுகர்வோர்களுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி 15.07.2020 வரை, தாமதக் கட்டணமன்றி செலுத்த காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.

8. தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் அவர்களுடைய மின்கட்டணத்தை அவரவர்களுக்குரிய கடைசித் தேதிக்குள் செலுத்தவில்லையெனில், அந்தக் கடைசித் தேதிக்கும் பணம் செலுத்தும் தேதிக்குமான காலகட்டத்திற்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும்.

9. மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி எதுவாக இருப்பினும், 15.07.2020 வரை, எந்த தாழ்வழுத்த நுகர்வோர்க்கும் மின்துண்டிப்பு செய்யப்பட மாட்டாது. இதற்கான மின்துண்டிப்பு மற்றும் மறுஇணைப்பு கட்டணம் விதிக்கப்பட மாட்டாது''.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்