உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு; விடுதலை செய்யப்பட்ட கவுசல்யா தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யாவும், திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சங்கரும் காதலித்து திருமணம்செய்து கொண்டனர். இருவரும்வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்புதெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2016 மார்ச் 13 அன்று உடுமலைப்பேட்டையில்சங்கர் ஒரு கும்பலா ல்கொலைசெய்யப்பட்டார். கவுசல்யா, காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் அமர்வு நீதிமன்றம் கடந்த 2017-ம்ஆண்டு கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்குமரண தண்டனையும், ஸ்டீபன்தன்ராஜ் என்பவருக்கு இரட்டைஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும் விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரைவிடுதலை செய்தது.

இந்த வழக்கில்தண்டனையை எதிர்த்து சின்னச்சாமிஉள்ளிட்ட 8 பேரும் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர்.

இந்த வழக்கைவிசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சின்னச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், 5 பேரது மரண தண்டனையைஆயுள் தண்டனையாக குறைத்தும் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில்சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டதைஎதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது விடுதலையைஎதிர்த்து அரசு தரப்பில்மேல்முறையீடு செய்யப்பட்டால், தனதுதரப்பு வாதத்தையும் கேட்டபிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என அதில் கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்